ஓமாம்புலியூருக்கு வடகிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து எய்யலூர் வழியாகக் காட்டுமன்னார்குடிக்குச் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம்.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கடம்ப மரங்கள் அதிகம் இருந்ததால் கடம்பூர் என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான், இந்திரன், செவ்வாய் ஆகியோர் வழிபட்ட தலம். "என்கடன் பணி செய்து கிடப்பதே" என்று அப்பர் பாடிய தலம். |